கண்ணம்மாவின் காதலர்கள்

ஒற்றைச்சூரியன் ஒரு நிலவு ஒரு உலகு ஒரே காதல் என்பது பொய் எங்கள் பார்வைக்கு வந்தது இதொரு சூரியன் தான் கண்ணுக்குக் காட்டப்படுவது இந்த ஒரு நிலவுதான் எங்கள் இருப்பைத் தாண்டி எங்கோ  உலகங்கள்  இருக்கலாம்; ஒரே காதல் என்பது ரகசிய நகரம் ஒரே காதல் என்பது மர்மங்கள் புதைந்த கண்ணாடிச் சவப்பெட்டி உடையாதவரை எந்தப் பேய்களும் கிளம்புதற்குரிய பீதியில்லை மனித இனத்தின் யதார்த்தங்களை இரவுகளில் ஒளித்துவைக்கக் கற்றவர்களின் நாணயங்கள் கரும்புலிகளின் கண்களைப்போல் ஒளிர்கின்றன கதவின் பின்புறத்தில்…

வனச்சிறுக்கி

அந்தக் காட்டினில் ஒரு வனச்சிறுக்கியைப் போல பெயர் அறியாததொரு பூவைத் தேடி புறப்படவும் சூனியக்காரியைப் போல பறக்கும் கட்டையின் மேலேறி வானளாவக் கிளம்பும் பெருவிருப்பிலும் மந்தையில் இருந்து கழன்றதொரு ஆட்டுக்குட்டியைப்போல காலத்தைத் தாண்டியோடும் கனவுகளைச் சமைக்கிறது மனம். நளினமுமற்று நாணமுமற்று மதயானையின் வேகம் உச்சந்தலையில் சுர்ரென ஏற முள்வேலியைப் பிய்தெறியும்; ஒரு வேட்டை மிருகத்தைப்போலது சிலிர்ந்து கிளம்புகிறது. ஆட்டுக்குட்டிகள் சிலிர்கலாகாது சிலிர்தாலும் சீறலாகாது இது வேதாளத்தின் அறிகுறியென வனச்சிறுமிக்கு யார்யாரோ சொல்லிப் போகிறார்கள். தலைகீழாய் தொங்குவதே புனிதமோ…

நீ எங்கிருக்கிறாய்?

பெருவானம் மறைத்த இறுதிப் பௌர்ணமியின் ஒளிர்வுடன் வந்த உன்னையும் மண்நுழைந்து வேர்களினிடையில் புகுந்ததொரு சொட்டுப்போல பூமியின் விரிந்த பிரதேசமெங்கும் கொட்டித் தீர்த்த உன்னையும் வீட்டின் புதர்களிலும் பூக்களிலும் படர்ந்து தொட்டு வீசி வரும் கணநேர காற்றோடு கண்ட உன்னையும் எங்கிருக்கிறாய் என்று நான் கேட்கலாமா? யாதொன்றும் இல்லாத காலங்களில் அமைதியறுந்து யுத்தத்திற்குத் தயாராகி எழுந்து விரிகிறது ஒரு பறவை நிலவின் ஒளிர்வும் மழையின் சொட்டும் காற்றின் படர்வுமற்று உணர்வு தொலைத்த கவிதைவரிகளைத் தேடித்பிடித்துக் கொத்தி முழுங்கி விரித்த…

மூலைகள்

இது எனது வீடு. இந்த வீட்டின் ஓவ்வொரு மூலையும் என்னுடையது ஓவ்வொரு மூலையும் தனித்துவமானவை! இதோ இந்த மூலையில் இரண்டு பாத்திரம், நாலு கரண்டி ஒரு அடுப்பு… எல்லாம் எனது எதிர் மூலையில் எனக்கென்று வாங்கித்தந்த பெரும் இயந்திரங்கள் துணிகள் துவைக்கவும்.. காயப்போடவும்.. ஒவ்வொரு அறையிலும் பெரிய அலமாரிகள் காய்ந்ததை அடுக்கவென்று வலப்பக்கம் இருக்கும் மூலையில்தான் படுக்கையறை. படுக்கவும்… கலைக்கவும்… பின் விரிக்கவும்! அதன் இடப்புறமும் எனது மூலைதான் ஒரு தொட்டில் பால் போத்தல்கள் பொம்மைகள் அழுக்குத்…