கனிமொழி – கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை – பகிர்வு 9

கனிமொழியின் கவிதைகளுக்கும் அவரின் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரத்தம் படிந்த கரங்களோடு கைகோர்த்துக் கொண்டவர். மனிதப் பிணங்களைக் கண்டும் மௌனமாயிருந்தவர். ஆனால் அண்மையில் வாசித்த கவிதைகளுள் இவை என்னைக் கவர்ந்தவை. பொருள் புதைந்து, பரந்து வரியும் கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை. எந்த ஒளிப்பும் மறைப்பும் இன்றி, நடைமுறையை இலகு மொழியில் எளிமையாக எடுத்துவரக்கூடியது புதுக்கவிதை.. தமிழ் பெண்களின் கவிதை வெளிப்பாடுகள் என்பது தமிழ் இலக்கிய பரப்பில் சமீப காலமாக நிகழ்ந்துள்ள மாற்றங்களில் ஒன்று.…

சேரன் – முகில்கள்மீது நெருப்பு தன் சேதி எழுதியாயிற்று சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக – பகிர்வு 7

”தொடரும் இருப்பு” என்ற கவிதைத் தொடரின் இறுதிவரி இப்படிச் சொல்கிறது. அலைக் கரங்கள் மணலுக்கு ஆகாய வெளியிருந்த செம்பரிதி கடலுக்கு ஆழப் பதிந்தபடி என் கவிதைச் சுவடுகளோ உயிர் வாழும் துடிப்பிற்கு   கவிஞர் சேரனின் ”இரண்டாவது சூரிய உதயம்” என்ற கவிதையில் இருந்து இந்த வரிகள் என்பதாம் ஆண்டுகளில் கவிஞரை அடையாளப்படுத்திய கவிதைளில் ஒன்று சிரஞ்சீவிதம் கொண்;டு எம் முன்னுடன் இன்றும் காற்றோடு வருகிறது. ….. என்ன நிகழ்ந்தது எனது நகரம் எரிக்கப்பட்டது எனது மக்கள்…

பானுபாரதி – கட்டுடைத்து விடுதலை செய்திருப்பது சொற்களை மட்டுமல்ல – பகிர்வு 6

எழுதத் தொடங்கி எத்தனையோ வருடங்களாகிவிட்டன பெண்கள். இருட்டையும் சுமையையும் கிழித்து தம் எழுத்துக்களை தொகுப்பதற்குள் சிலருக்கு ஆயுட்காலம் கேட்கிறது.பல வருடக் இலக்கியப் பயணத்தின் பின் தான் பானுபாரதியின் கவிதைகள் கோர்கப்பட்டிருக்கின்றன. நோர்வே நாட்டின் அனுபவங்களைவிட தான் அனுபவித்த தன் தேசச் சுவடுகளை நோக்கியே இவரது பல கவிதைகள் விரிகிறது. எழுத்துபவர்கள் எல்லாம் சமூகத்தை திருத்தும் நோக்குடன் தான் எழுதுகிறார்கள் என்ற எண்ணம் வாசகர்கள் பலருக்கும் இருக்கலாம். கவிதை இலக்கிய வெளிப்பாடுகள் எல்லாம் எதையும் எவரையும் திருத்தும் நோக்கோடு…

புதியமாதவி – எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எதிர் முகங்கள் கண்டு நான் எழுதுவதை நிறுத்திவிட எண்ணியதும் உண்டு! – பகிர்வு 4

கவிதைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளுதலைவிட சிறந்தது கவிதையை ஆறஅமர இருந்து உணருவது. ஒரு கவிதை படித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும் போது சில வேளைகளில் குழப்பம் தோன்றும். கவிதையின் உயிர் இருக்கும் பகுதியை மட்டும் கவிதைக்கு வலித்துவிடாமல் பிரித்து கொணரும்போது சின்னதாய் ஒரு கீறல் கைமீறி மனதில் ஏற்பட்டுவிடுகிறது. கவிதையை எப்படி உணருவது? உணர்வின் அதிர்வை ஏற்படுத்தக்கூடிய உச்சம் கவிதையில் எங்கே கிடக்கிறது? அதை எப்படி உணரப்போகின்றோம்? வார்த்தைகள் பிரசவிக்குமிடத்திலா? மனம் லயிக்கும் இடத்திலா? இதோ…

உருத்திரமூர்த்தி – சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்

உலகில் உள்ள அனைத்தும் போல இலக்கியமும் மாறிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் போர் குணத்துடனும் சில சமயங்களில் பெரும் கூச்சலுடனும் இன்னும்  பல சமயங்களில் மொளனித்தும் தமக்கென்ற மாற்றத்திற்கு வழி செய்து கொள்கின்றன. இந்த மரபுக் கவிதைகள் என்னதான் சொல்கின்றன? எந்த வகையில் அவை மரபுக்கவிதை என்ற பெயரைச் சூடிக்கொள்கின்றன என்று பார்த்தால், மரபுக் கவிதை என்பவை அறம், ஒழுக்கம், மதபோதனை, என்பன பாடுபொருளாகவும், புலமையின் வெளிப்பாடு என்பதும் இங்கே முக்கித்துவம் பெற்று நிற்ப்பதைக்காணலாம் இந்த மரபுகவிதைக்களும் ஒரு…

சிவரமணி – சமுதாயச் சிலுவையைச் சுமந்து வாழ்ந்த பெண் கவி – பகிர்வு 2

சமுதாயச் சிலுவையைச் சுமந்து வாழ்ந்த பெண் கவி    வரலாறிக்கு முன்னான காலப்பகுதியெனக் குறிக்கப்படும் குழு நிலைச் சமூக அமைப்பு நிலவிய காலத்திலாயினும், சாம்ராஜ்யங்கள் கோலோச்சிய நிலப்பிரபுத்துவ மன்னர் காலமாயினும், சங்கம் அமைத்து அறநெறி கூறிய வரலாறு தமிழ் இலக்கியத்திற்கு உண்டு. இச்சங்கங்கள் முறையே முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என குறிப்பிடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் காணக்கிடைக்கும் இலக்கியங்கள் அனைத்தும் கடைச்சங்கத்தில் ஆக்கப்பெற்ற நூல்கள்தான் என்று நம்பப்படுகிறது. முதல் இரு சங்கங்களில் ஆக்கப்பட்டவை அனைத்தும் கடல் நிரப்பரப்பை ஆக்கிரமித்தபோது…

பாரதி – கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் ஒர் தொடர் பயணம் – பகிர்வு 1

நான் எழுதுவதை விட எழுத நினைப்பது அதிகம். எத்தனை கவிதைகள் எழுதி முடித்தாலும் சில கவிதைகளைப் படிக்கும் போது இந்தக் கவிதைகளை நான் எழுதவில்லையே என்ற ஆதங்கம் ஆழ்மனதில் ஊர்ந்து போகும். மரபுக்கவிதைகளில் இருந்து புதுக்கவிதையில் வடிந்து ஹைக்கூக்கள் வரை கவிதைகளில் பல விதங்கள் இருந்தாலும் இந்த அவரசர வாழ்க்கையில் நான் விரும்பி ஒரு சில நொடியாவது நின்று வாசித்துப் போவது அதிகம் புதுக்கவிதைகள் தான். அப்படி நின்று படித்து சுவைத்த கவிதைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த…

தினத்தந்தியில் வெளியான செவ்வி – 18.11.2012

இன்று 18.11.2012 தினத்தந்தியில் வெளியான செவ்வி எடுக்கப்பட்ட விடயத்தில் ஒரு சில விடயங்களே அங்கு போடப்பட்டதால் இங்கே முழு பேட்டியையும் தந்திருக்கின்றேன். தங்களைப் பற்றி இலங்கையில் குரும்பசிட்டி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட நான், போரில்தந்தையை இழந்த நிலையில் எனது தாயாருடன் தமிழ்நாட்டிற்கு நான்கு வயதில்; புலம்பெயர்ந்தேன். அதன் பின் பன்னிரண்டு வயதிலிருந்து நோர்வே மண்ணில் எனது தாயாருடன் வாழ்ந்துவருகிறேன். எனது கலை இலக்கிய ஆர்வத்திற்கு  எனது தாயாரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.தகவல்தொழில்நுட்பம் படித்து, தற்போது Miele  எனும்…

சகித்துக்கொண்டுதான் சாகசங்கள் புரிகிறோம் வெட்கமில்லாமல்

நூல் அறிமுகம்: கவிதாவின் ‘என் ஏதேன் தோட்டம்’ எல்லா நூல்களையும் படிப்பதுபோல் கவிதைநூலை எடுப்பதுமில்லை; படிப்பதுமில்லை. ஒரு புதினத்தை , வாழ்க்கை வரலாற்றை, சிறுகதைத்தொகுப்பை, கட்டுரை நூலைப் படிக்கும் வேகம், கவிதை நூலைப் படிக்கும்போது இருக்காது. ஓராண்டில் படித்த நூல்களைப் பட்டியலிட்டால் கவிதைநூல்கள் குறைவாக இருக்கும். நூல்களின் எண்ணிக்கையைக் கூட்ட நினைத்தால் கவிதை நூல்களை அதிகம் எடுத்துப் படிக்கலாம்.காரணம் பக்கங்கள் குறைவாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை கவிதைநூல்களைப்படிக்கும்போது 5 பக்கங்களுக்குமேல் விரைவாக படிக்கமுடியாது. காரணம் அது கவிதை. கவிதைச்சொற்கள்…

கவிதா சினிமாவுக்குப் போனால்…? by piraththiyaal//

எனது திரைப்பாடல் தொடர்பான  பானுபாரதியின் விமர்சனம்… கவிதா சினிமாவுக்குப் போனால்…? by piraththiyaal// பெண்ணியக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த கவிதா, தமிழக சினிமா சகதிக்குள் எப்படி, எப்படி விழுந்தாரோ…? ஆணாதிக்கத்தை ஆவேசமாகச் சாடிய கவிதா எப்படி எப்படி இப்படி…? “உன் விரல்களில் வில்லாய் உடல் வளைகிறதே, கழுத்துவரை புது உலகம் ஒன்று நகர்கிறதே… கணைகளுமே என் விழியில் வந்து பாய்கிறதே…” ஆணின் போகப்பொருளாய் பெண்ணுணர்வுகளை எப்படி வெளிப்படுத்த முடிகிறது.// முகநூலில் பதிவிடப்பட்ட கவிதாவின் இந்தப் பாடலுக்கு இப்படியொரு குறிப்பை…