பரமசிவம் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

ஈழத்துப் பெண் ஜெயமோகனுக்கு எழுதிக்கொள்வது. பெண்கள் தொடர்பாக அடிப்படை அறமே உம்மிடம் இல்லையே ? எழுத்தாளர் பட்டியலில் எப்படி உம்மை இருத்தி வைத்தார்கள்? கவிதைகளால் பெண்களின் கற்பழிந்து போகும் என்றால் என்ன? எப்படி யோசித்தும் புரியவேயில்லை? உமது பார்வையில் பெண்களிடத்தில் கற்பு கடைசியாக எங்கே இருக்கிறது? எம் மண்ணின் கவிதைகள் அல்லது கவிஞர்கள் எந்த விதத்தில் பெண்களின் கற்பை அழித்துவிடுவார்கள் என்ற கவலை உமக்கு? விளக்கமாகச் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்வோமல்லவா? உம் போன்றவர்களை இன்னும் எழுத்தாளர்கள்…

‘என்னோற்றான் கொல்’ – நோர்வே வாழ் தமிழர்களின் சினிமா.

பிரேம்ராஜ் நெறியாள்கையில், நோர்வே துரொண்ஹைம் தமிழ் அரங்கம் (Trondheim Tamil Theatre) கலைஞர்களின் ‘என்னோற்றான் கொல்’ —————————————————–     ‘என்னோற்றான் கொல்’ – நோர்வே வாழ் தமிழர்களின் சினிமா. புலம்பெயர் தமிழர்களின் முதற் சுற்று முடிந்துவிட்டது. எமது இரண்டாம் தலைமுறையின் சுற்று ஆரம்பித்திருக்கிறது. என்னோற்றான் கொல் இவர்களின் வாழ்வியல் பற்றிப் பேசுகிறது. என்னோற்றான் கொல் எமது கதை. புலம் பெயர்ந்த மனிதர்களின் மனநிலை. எம்மைச் சுற்றி இருக்கும் மனித மனத்தின் உளவியலைப் பேசும் திரைக்கதை. கதையின்…

‘ஜீவநதி’ இதழில் பிரசுரமான நேர்க்காணல் – கோமகன்

ஜீவநதி (இலங்கை) 02 பங்குனி 2016 “கவிதையின் அழகே அது சுதந்திரமாகவும், உண்மைத் தன்மையுடனும் தன்னை வெளிப்படுத்துவதுதான்.” கவிதா லட்சுமி , கலாசாதனா (நோர்வே) புலம் பெயர்ந்த ஈழத்து அகதிகளின் இரண்டாவது பரம்பரையின் அசுரவளர்ச்சிக்கு ஓர் சிறந்த உரைகல்லாக இருப்பவர் கவிதா லட்சுமி. ஈழத்தின் வடபுலத்தில் குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கவிதா லட்சுமி மிகச்சிறிய வயதில் புலப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டவர். தற்பொழுது நோர்வே நாட்டில் வசித்துவரும் கவிதா, கவிதை, இலக்கியம், நடனம் என்று பல்முக ஆற்றல்களை தன்னகத்தே கொண்டவர்.…