விஜயநகரப் பேரரசு – 1 ‘ஹசார ராமா கோவில் ‘

ஹம்பியில் அமைந்துள்ள கலையம்சம் மிக்க ஒரு அழகிய கோவில் ஹசார ராமா கோவில். இது விஜயநகர அரச குடும்பத்தினரின் தனிப்பட்ட வழிபாட்டுத்தளமாக இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஹம்பியில் உள்ள கோவில்களுள் சிறிய அளவிலான கோவிலாக இருந்தாலும் ஏனைய கோவில்களில் இருந்து சற்று மாறுபட்டதாகத் தெரிகிறது. ஹசார ராமா கோவில் பதினைந்தாம் நூற்றாண்டின் காலப்பகுதியில், இரண்டாம் தேவராயரால் கட்டப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஹம்பி உலகில் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளங்கள் மிக்க நகராகவும் இருந்திருக்கிறது. நீண்ட கடைத்தெருக்கள்…

கடவுளர்களுக்கு என்னவாயிற்று? புனிதங்கள் என்னவாயின?

சோக்கிரட்டீஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் இங்கே எழுதப்படுவது அவர் பற்றிய விவரணையில்லை. இன்னொரு விடயத்தைப் பற்றிப் பேசுவதற்க்கு முன்னரான ஒரு சிறுகுறிப்பே. இனம் மதம் மொழி தாண்டி கல்விக்கூடங்களிலும், கலைக்கூடங்களிலும் பாடப்பொருள் ஆகியிருக்கும் மனிதர் சோக்கிரட்டீஸ். கிருஸ்துவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இவரை மேலத்தேய சமூகம், தத்துவர்த்த சிந்தனைப்போக்கின் ஆரம்பமாக கருதுகின்றனர். மேலத்தேய சமூகத்திடம் மட்டுமல்லாது, அனைத்து சமூகங்கிடையும், எம்மிடையும் பாட புத்தகங்களிலும், கலைமேடைகளிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர். கல்விக்கூடப் பாடத்திட்டங்களில் தவிற்கமுடியாத ஒரு நபராக,…

பிரதி மேயர் கம்சாயினி – விமர்சனங்கள்

பிரதி மேயர் கம்சாயினி இலங்கையில் நடாத்திய கலந்துரையாடல்கள் தொடர்பாக கருத்துக்கள் பேசப்பட வேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இங்கு காணப்படும் பெரும்பான்மை  அனைத்தும் பெண் என்பதை முன்வைத்து கீழ்த்தரமாக இரண்டாம் மூன்றாம் தரப் பத்திரிக்கைகள் போல தனிநபர்கள் தமது வக்கிரத்தை எழுதுவது அருவெறுப்பையே உண்டு பண்ணுகிறது. சமூக வலைத்தளப் போராளிகளே கம்சாயினியுடைய கலந்துரையாடல் சம்மந்தமாக தங்களுடைய கருத்துக்களையோ விமர்சனங்களையோ பதிவிடுங்கள். அதைவிடுத்து அவரே தரவேற்றிய புகைப்படங்களை எடுத்து ஏதோ புதிதாக நீங்கள் கண்டுபிடித்துவிட்டது போல பதிவிட்டு…

இப்படியாகப்பட்டவள் நான்.

பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே விடிந்துவிடுகிறது. உணவோ, பொருளோ, பொன்னோ, மண்ணோ எதுவும் என்னை திருப்தி கொள்ளவிடுவதில்லை. இளவரசியைப்போலவும், சாண்டில்யன்கதையில் வரும் வெண்குதிரை நாயகர்களின் நாயகியாகவும் நான் கண்டகனவுகள் எல்லாம் சிறுபிராயத்துக் கனவுகள்தான். எனது கனவுகள் அடங்காத குணமுடையவையாகப் பெருகி நிற்கின்றன. கண்ணகியாகவும், மணிமேகலையைத் தந்த மாதவியாகவும், நானே மணிமேகலையாகவும் இருந்திருக்கிறேன். பதின்மவயதிலேயே அதுவும்…

அன்பினைச் சேர்தது ஐம்பூதங்கள் ஆறு!

இன்னும் சில மணிநேரங்கள் தான்… ஒரு நொடிப்பொழுதுதான்… அவ்வளவே தான்! இன்னுமொரு ஆண்டும் ஓடியேவிட்டது. இவ்விரவில் நான் சந்தித்த மனிதர்களையும், கண்ட அனுபவங்களையும் நினைத்துப்பார்க்கிறேன். எத்தனை நொடிகள்? எத்தனை நகரங்கள்? எத்தனை மனிதர்கள்? பரிமாறிக் கொண்ட நேசங்களும், கோபங்களும், கடந்து போன மனிதர்களும், கடந்து போக எண்ணும் உறவுகளும் தான் எத்தனை? எத்தனை? அன்பும் கோபமும் அவ்வளவு நெருக்கமானவையா என்ன? இந்த ஆண்டில் தான் நான் முன்னைக்கும் மேலாக மிகவும் கோபப்பட்டிருக்கிறேன். மனதுடைந்தும் போயிருக்கிறேன். சந்தர்பம் கிடைக்கும்…

Each time a woman stands up for herself, without knowing it possibly, without claiming it, she stands up for all women.

“Each time a woman stands up for herself, without knowing it possibly, without claiming it, she stands up for all women ” – Maya Angelou கேள்விகளும், கேலிகளும், அவமதிப்புகளும், குத்தல்களும் தனக்கு வரும் என்று தெரிந்தும் ஒரு பெண் துணிந்து நின்று பேசுகிறாள் என்றாள் அது அவளுக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்காகவுமே அவள் எழுந்து பேசுகிறாள். உங்கள் வீட்டுப் பெண்களுக்கான இடஒதுக்கீடோ, கல்வியோ, வேலை வாய்ப்போ அல்லது…

பெயர் என்பது வெறும் பெயரல்ல.

ஒரு மனிதனுடைய பெயர் என்பது வெறும் பெயரல்ல. அது ஒரு பெயராக மட்டும் மனதில் பதிவதில்லை. அது உடலுக்கும் உயிருக்குமான அடையாளம் என்பதுகூட அல்ல. மனிதனுடைய செயற்பாடுகளினதும், செயற்பாட்டின் வினைகளாலும் அது கட்டியெழுப்பப்படுகிறது. பெயர்கள் எமது உணர்வலைகளைக் தட்டியெழுப்பக்கூடியவை. ஒவ்வொருவருக்கும் சில பெயர்கள் மனிதில் பதிந்துவிடும். சில பெயர்களின் மேல் ஒதுவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும்.     இந்தப் பெயர்களைப் பற்றியெல்லாம் நான் அதிகம் சிந்தித்ததில்லை. இருந்தும் பல வருடங்களாக எனக்குள் ஒருவித கிளர்ச்சியை, இனம் தெரியாத…

அடைமழைப் பொழுதுகளில்…

எல்லாம் மனது ஏதோ ஒன்றை நினைத்து ஏங்கத் தொடங்கி விடுகிறது. சடசடவெனக் கொட்டி, மழை போடும் கூரைச் சத்தத்தைக் கேட்டு, விடுபட்டதொரு இறகினைப்போல மனம் அமைதியாகிவிடுகிறது. மேலும் இக்கணங்களெல்லாம் ஏன் உன்னையே நினைவுபடுத்துகிறது சொல்! இலைகளின் முனைகளில் இருந்து கொட்டும் ஒவ்வொருசொட்டும் எத்தனை சுவர்கள் தாண்டியும் வந்துவிடுகிறது. அந்தச் சலசலப்பு அதுதான் உன் நினைவுகள்போல அவை எதையும் ஊடுருவிச் சேரவல்லது. நீ அறியாததா என்ன! மழைநாள் எத்தனை அழகானதோ, அத்தனை விசித்திரமானதும் கூட! இப்போது பார் இந்தத்…

பாரதியும் புதுமைப்பித்தனும்

புதுமைப்பித்தனும் பாரதியும் எப்படி ஒரே பேசுபொருளை இரண்டு வேறுபட்ட இலக்கிய வடிவங்களுக்கூடாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரசியமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இவர்கள் வெவ்வேறு இலக்கிய வடிவங்களை மட்டும் கையில் எடுக்கவில்லை. எடுத்த விடயத்தைப் பார்க்கும் விதமும் அதைக் கையாளும் முறையும் மிக மிக வேறுபட்டிருக்கிறது. பாரதியோ காதல் குணம் படைத்தவன். அவனுடைய வடிவமோ ஒன்றிப் போவது. இதயத்திலிருந்தே விடயங்களைக் கையாள்வது. காதலும், ஆன்மீகமும், தத்துவமும் கூடிக் கவி செய்வது. கவிதையில் ஓசையும், அழகும், ஆழமும் கொண்டுவரும் கவிதைச்…

கொஞ்சம் தேனீர்!

எனக்குத் தெரிந்த உலகின் மிக ரம்யமானதொரு கலைப்பொருள் என்றால் அது தேனீர்க்குவளைதான். ஒன்றுபோல் டசின் கணக்காக வாங்கி வைத்திருக்கும் தேனீர்க் குவளைகளைவிட அப்பப்போ தனித்தனியாக அழகியல் வேலைப்பாடுகளுடன் குவளைகளை வாங்கிச்சேர்ப்பதில் தனி ஆர்வம் உண்டெனக்கு. இப்போதும் தேனீர்குவளையில் இருந்து கிளம்பி காற்றோடு கலந்துவிடும் ஆவியின் அழகினைப் பார்த்தபடிதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். குவளையின் விளிம்பில் இருந்து அதன் வாசம் போதையெனக் கிளம்புகிறது. விரல்களைச் சூடேற்றியபடி இந்தப் பனிக்காலத்தை பருகியிருத்தல் என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். பிறர் தரும் தேனீர்த் தருணங்களில்…