ஆடற்கலையும் ஆத்ம தேடலும்
பிரபஞ்சம் யாவுமே கூத்தென்றால் உலகின் யாவையும் நடம் செய்வோம்! ஆடற்கலையும் ஆத்ம தேடலும் —————————- பெண்களுடன் மாயக்கண்ணன் செய்யும் சில்மிஷங்களையும், சிருங்கார லீலைகளையும் பெருமையோடு ஏற்றுக் கொள்ளும் சமூகம், சூர்ப்பனகைகளின் மூக்குகளை மட்டும் அறுத்து அனுப்பிக் கொண்டே இருப்பதைப்பற்றி நாம் சிந்தித்ததுண்டா? நாட்டியக்கலை உடல் அசைவுகளாலான தொன்மை வாய்ந்ததொரு மொழி வடிவம். நாட்டிய மொழியினூடு முன்னெடுக்கப்படும் கலை வடிவமும் அதன் பேசுபொருளும் இரண்டு வேறுபட்ட விடயங்கள். கலை வடிவம் என்பது கட்டுமானம். பேசு பொருள் என்பது மனித…









