வனச்சிறுக்கி

அந்தக் காட்டினில் ஒரு வனச்சிறுக்கியைப் போல பெயர் அறியாததொரு பூவைத் தேடி புறப்படவும் சூனியக்காரியைப் போல பறக்கும் கட்டையின் மேலேறி வானளாவக் கிளம்பும் பெருவிருப்பிலும் மந்தையில் இருந்து கழன்றதொரு ஆட்டுக்குட்டியைப்போல காலத்தைத் தாண்டியோடும் கனவுகளைச் சமைக்கிறது மனம். நளினமுமற்று நாணமுமற்று மதயானையின் வேகம் உச்சந்தலையில் சுர்ரென ஏற முள்வேலியைப் பிய்தெறியும்; ஒரு வேட்டை மிருகத்தைப்போலது சிலிர்ந்து கிளம்புகிறது. ஆட்டுக்குட்டிகள் சிலிர்கலாகாது சிலிர்தாலும் சீறலாகாது இது வேதாளத்தின் அறிகுறியென வனச்சிறுமிக்கு யார்யாரோ சொல்லிப் போகிறார்கள். தலைகீழாய் தொங்குவதே புனிதமோ…

பொம்மைத் தொழிற்சாலை

என் கனவு வானம் உயரத்தில் இருக்கிறது அங்கிருந்தபடியே அனைத்தையும் குனிந்து பார்க்கிறேன் பனிபடர் நிலத்தில் உயர்ந்த மரங்கள் மேலாகவும் சகாராவின் அழகிய அல்லிப்பூக்கள் நெடுகிலும் சிரித்துவிளையாடும் சோமாலியக் குழந்தைகளோடும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் புல்வெளிமீதும் இலங்கைத்தீவில் பௌத்த, இஸ்லாமிய மனிதர்களோடும் ஈரான் ஈராக்கிய புதிய நகரங்களுடாகவும் நான் பறந்து வருகிறேன். மேகத் துண்டுகள் மனதை துடைத்தெறிகிறது தேவதைகள் என்னோடு பூமிக்கு பயணப்படுகிறார்கள் உலக உருண்டையில், எதிலும் கோடுகள் இல்லை அண்டவெளியெங்கும் தெய்வீகமாக நான் கடவுள்கள் மனிதர்களாக பிறந்துகொண்டிருக்கின்றனர் சிரிப்பொலியில்…

நாயகனின் செருப்பை ஏன் காட்டுகிறீகள் என்று நாங்கள் கேட்டதுண்டா

சாயஉதடுகள் குவிப்பதுவும் மைஇமைகளைக் கொட்டுதலும் காற்றிற் கூந்தல் சுற்றிச் சுழலுதலும் அரைநிர்வாணமாய் குலுங்கும் முலைகளுடனும் வெண்சாயத் தேவதைக்கனவுகள் சுமந்துவரும் மனுசிகள் சுரக்கும் திரைஅரங்கில், நாயகனின் செருப்பை முதலில் காட்டுகிறார்கள் ம்…? கடவுள் உட்பட இப்படியிருக்கக் கடவதாக சொன்ன இயக்குனர்கள் மற்றும் மனிதர்கள் ஏதோவொன்றின் நகலாகவே விரும்பும் திரைமார்பில் பாலுறுஞ்சிய தோழர் தோழியரின் கனவுகள் அப்படியே கலையாதிருக்கிறது எப்போதும் விறைத்துப்பெருத்த வண்ணமே இருக்கும் திரைமார்புகள் இங்கு யார்மீதும் எதற்காகவும் ஆத்திரப்படுவதற்கு முன் எதிர்த்தலை முதலில் என் சலனத்தோடு வைத்தபின்…

அலகு

  கொண்ட நேசங்களுக்கும் வெறுப்பு உணர்வுகளுக்கும் அலகு மயிரிழைதான் பூக்களும் இலையும் செடியும் மரமும் வெளிகளும் மலைகளும் வானும் அகண்ட சமூத்திரங்களும் பெரும் பிரபஞ்சமும் எதனாலும் நிரப்பப்படுவதற்கில்லை. பால்மண்டலத்தைபோல விரிந்து கிடக்கிறது இந்த மயிரிழை விரிசல் அதன் மாயையின் பொருள் விளங்கா செய்வதறியாது உறைந்துவிட்டேன் சகி! இருந்தும் ஒன்று கண்டு வந்தேன் அண்டமெங்கும் அதுவே சக்தியென எதையும் தகர்த்து எதையும் மறைத்து எதையும் உடைத்து சூன்யத்தை நிறைத்து வாழ்க்கையை நிரப்பிவிடுகிறது இந்த முகமூடி.  

ஜடாமுடியில் நெளியும் பாம்புகள்

என் வெளிமீது படரும் பொய்க்காலங்களின் கண்கள் என்னை மேவி நுழைகிறது என் ஜடாமுடியிலிருந்து பிடுங்கி எறிந்த பிறகும் இறகு முளைத்த சர்ப்பங்களென நினைவுகளில் ஊர்ந்து விடத்தின் வீரியத்தை வக்கிரமாய் கக்கியெறிகிறது ஆற்றாமல் நெளிந்து, அருவெறுத்து ஒதுங்கி நின்று தள்ளி நடந்து பாராமல்ச் சென்றும்… உன்னோடானா அன்றைய பொய்காலங்களின் தனல் பட்டு அதிர்ந்து மௌனித்தேன் ரத்தம் கண்ட வடுகளில் வலி பழைய புண்களைக் கிளறும் துர்நாற்றம் பரபி உச்சந்தலையுள் ஊடுருவும் சடலங்கள் எனக்கடந்த யுகங்கள் மீண்டும் நிகழுமென் வெளிமீதில்…

பிளவுகள்

இதோ எனது பூமி என் கால்களுக்கடியிலிருந்து நழுவுகிறது அரசியல் ஆணிகளாலும் பிளவுமனக் கடப்பாறைகளாளும் ஓங்கி அடித்தவண்ணம் ஆக்கிரமிக்கும் அடங்காத உயிரினங்கள் போல ஆறாதநடனம் புரிகின்றனர் எனது உலகு பல கூறுகளாக்கப்படுகிறது வெடிப்புகளின் நுனியிலிருந்து கோசங்கள் புறப்பட்டு புலரும் திசையெங்கும் பீங்கான் கோப்பைகள் போல சத்தமாய் உடைகிறது பூமி இவர்கள் தம்மை தேவர் என்றும் அவர்களை அசுரர் என்றும் அறிவிக்கின்றனர் அவர்கள் இவர்களை அரக்கர் எனவும் தம்மை வானவர் எனவும் அறிக்கையிடுகின்றனர் பிளவுபடும் பூமியில் மனிதன் என்ற ஒன்று…

17 may – ஒரு பொழுது!

எங்கும் சிவப்பு நிறக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன முகம் மலர்ந்த மனிதர்கள் ஈசல்களைப் போல வந்துகொண்டிருந்தார்கள் வாழ்த்துக்கள் சொன்னார்கள்இ வாழ்த்துக்கள் சொன்னேன் இசைமுழங்கினர் கேட்டுக்கொண்டிருந்தேன் சுதந்திரம் பற்றிப் பேசினர் பார்த்துக்கொண்டிருந்தேன் சுதந்திரகீதம் முழங்கிற்று நானும் முணுமுணுத்துக்கொண்டேன் குழந்தைகள் அணிவகுத்துச் சென்றார்கள்இ அவர்கள் திரும்பும்வரை காத்துக்கொண்டிருந்தேன் அழகான ஆடைகள் அணிந்திருந்தார்கள் பலர் தமைநோக்கி அலைபேசிப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். சிறுமியர் மலர்கிரீடம் சூட்டியிருந்தனர். அழகாயிருந்தது பாண்டங்கள் கொடுத்தார்கள்இ கட்டியணைத்தார்கள் நிதிசேகரித்தார்கள்இ நின்று பேசினார்கள் தெருவெங்கும் பூக்கள் சுதந்திரமாய்ச் சிரித்தாடின. கைகட்டி அசைவற்று நாகரிகச் சிரிப்போடு…

ஞானம்தேடிச் சென்றவர் கதை

ஒருவனுடைய தலைகள் அந்தக் கூடைமுழுவதும் விற்பனைக்கென நிரம்பிக் கிடக்கிறது கடைகளில் எல்லாம் அதே தலைகள் கவனத்திற்குரிய தற்கால அழகுப்பொருள் இந்தத் தலைகள்தான் முண்டத்தின் தேவை அற்றுப்போனதோ முழுமை விட்டுப்போனதோ சுயத்தை முழுதாய் இழந்த தலைகள் இவைகள் எதற்கும் தயாராயிருக்கின்றன ஒரு கொரூரத்தோடு வீட்டின் முலைமுடுக்குகளில் இடமாற்றிக்கொண்டே இருக்கிறேன் தோட்டத்து இலைகொட்டிப்போன மரத்தடியில் சமயலறையின் நாற்றம் விரட்ட வைத்த மெழுகின் அருகில் காலணிகள் கழட்டும் கீழ்படிக்கட்டின் மூலையில் சின்ன அழகியல் காட்ட வரவேற்பறையில் சுவரின் நிறத்தோடு ஒத்துப்போக அம்சமாக…