உலகின் மிக அழகிய புத்தகக் கடை

உலகின் மிக அழகான புத்தகக் கடை. தமிழகத்திற்கோ, இலங்கைக்கோ சென்றால் புத்தகக் கடைகளுக்குச் செல்வது வழக்கம். ஐரோப்பிய பயணங்களில் புத்தகக் கடைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தப் புத்தகக்கடை விதிவிலக்கு. அங்கு புத்தகங்கள் வாங்குவதற்காகவும் நான் செல்லவில்லை. எனது ஸ்பெயின் நடை பயணத்திற்காகப் போத்துக்கல்லின் பொட்டோ (Porto) என்ற நகரத்தில் வந்திறங்கி, யாத்திரைக்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக ஒரு நாள் அங்கு தங்க வேண்டியிருந்தது. அந்த நகரில் உலகின் அழகிய புத்தகக் கடை இருப்பதை அறிந்து சனிக்கிழமையன்று காலையிலேயே…

மனித இனம் இன்னும் எத்தனை வன்முறைகளைக் கடக்க வேண்டும்

. எந்த இடத்தில் இருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கேள்விக்கு உட்படுத்துவது? எதன் அடிப்படையில் இப்படியான அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றன? ஒரு பெண்ணை நிர்வாணமாக்குதல், அவளுடைய உடலை வன்முறைக்கு உள்ளாக்குதல் என்பது எதன் அடிப்படையில் ஒரு மனிதனுக்கு திருப்தியையோ மகிழ்ச்சியையோ அளிக்கின்றது? எந்தப் பின்புலமும் இல்லாமல் திடீரெனச் சிலருக்கு இப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றுமா? இப்படியான அவலங்களை நிகழ்த்துவது என்பது ஒரு தனிமனித மனப்பபிறழ்வா அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின் மனப்பிறழ்வா? நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் ஒன்று சேர்ந்து பெண்களை…

சிப்பியும் சூனியக்காரியும்

(பயணம் 1 ) பயணங்களைப் பற்றி எழுதுவது என்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகவே நான் கருதுகிறேன். பயணங்களை நாம் எழுதும் போது அங்குள்ள தகவல்களைத் தரும் ஒரு கட்டுரையாக எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. இன்றைய தகவற் தொழில்நுட்பக் காலத்திற் தகவல்களை நாம் இணையத் தளங்களிலேயே பெற்றுக் கொள்ள முடியும். ஒரு பயணத்தின் போது மனிதன் எதைப் பெற்றுக் கொள்கின்றான்? பெற்றுக் கொள்கின்றானா… இல்லவே இல்லை. அவன் தன்னை இழக்கத் தொடங்குகிறான் என்பதே முதன்மையானது. ஒரு பயணத்தில்…

8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கை

வேலைநிறுத்தம் செய்வது பெருமிதத்திற்குரியது. அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெ¯ண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது. நோர்வே நாட்டின் இன்றைய வளர்ச்சியின் அடைவுகளுக்கான பாதையில், தொழிற்சங்கங்களின் உருவாக்கம்,…

ஆன்மீகம் – மெய்யியற்தேடல்

ஆன்மீகம் – மெய்யியற்தேடல் …… இந்தியக் கலைமரபு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பலரும் சொல்லும் விடயங்களில் முதன்மையானது ஆன்மீகம். மனித புத்திக்கு எட்டாத, அப்பாற்பட்ட விடயங்கள் என்று மனம் கருதும் விடயங்களை நோக்கிய தேடலே ஆன்மீகம். ஆன்மாவினூடு நடைபெறும் தேடல் என்பது அதன் பொருள். இந்தியக் கலை மரபிலிருந்து ஏனைய கலை மரபுகளை வேறுபடுத்திக் காட்டும் தன்மையுடையது ஆன்மீகம். எனினும் ஏனைய நாட்டுக் கலைமரபுகளில் ஒட்டுமொத்தமாக ஆன்மீகம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்தியக் கலைமரபில் ஆன்மிகம்…

இந்தியக்கலையின் அங்கங்கள்- அழகியலும் கருத்தியலும் – பாகம் 1

இந்தியக் கலை மரபு: அங்கங்கள் | அழகிய ல் | கருத்தியல் உயிர்மிகும் ஓவியங்கள் அரங்காற்றுகை  பாகம் 1 இந்திய ஓவியக்கலை வரலாற்றில் இரவிவர்மாவினுடைய ஓவியங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இரவிவர்மாவின் ஓவியங்களினூடு இந்தியக்கலையின் அழகியல் அங்கங்களைப் பேசுவதே «உயிர்மிகும் ஓவியங்கள்» என்ற தலைப்பிலானா அரங்காற்றுகையாகும். இந்தியக் கலை மரபுகளை ஆய்ந்தறிந்த அறிஞர்களின் பார்வைகளின் படி, இந்தியக் கலை மரபுகளுக்கென்று தனித்துவமான பல கோட்பாடுகள் (அங்கங்கள்) இருக்கின்றன. பிறநாட்டுக்குரிய கலை மரபுகளிலிருந்து இந்தியக் கலை மரபுகள் வேறுபட்டுத் திகழ்வதற்குக்…

எழுத்து என் சுதந்திரம்

நேர்காணல் செய்தவர்: றஜித்தா சாம் கவிதா லட்சுமி: இலங்கையில் பிறந்து, இந்தியாவில் சிறுபராயத்தின் சில ஆண்டுகளைக் கடந்து, புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் குறிப்பிடத்தக்க இளம் பெண் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியம், நடனம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என பன்முக ஆளுமை கொண்டவர். தமிழ் இலக்கிய தேடல் உள்ளவர். ஆர்ப்பாட்டம் இல்லாது ஆழமான கருத்தியல்களைப் பதிவாக்கம் செய்பவர். கவிதையும் நடனமும் இவருக்கு உடலும் ஆன்மாவும் போன்றது. பனிபடலத் தாமரை, என் ஏதேன் தோட்டம், தொட்டிப்பூ, கறுத்தப் பெண், சிகண்டி என…

சக்திக்கூத்து

பாரதியின் சக்திக்கூத்துஅகம் – அண்டம் – கலவியின்பம் – உயிர்த்தொடர்ச்சி பாரதியின் கவிதைகள் ஆழமானவை. இந்தியத் தத்துவார்த்தச் சிந்தனை மரபுகள் பலவற்றை எளிமையாக எடுத்தியம்புபவை. கண்ணன் பாடல்கள், சக்திப் பாடல்கள், குயில் பாட்டு என்பவை அவைக்குச் சிறந்த உதாணரங்கள். பாரதியின் சக்திக்கூத்தும் அவ்வகையே. சக்திக்கூத்தினை இரண்டு வகையாக உணர்ந்துகொள்ள முடியும். சாக்த்த தத்துவச் சிந்தனையும் சக்தி வடிவமும் அகத்தகத்தகத்தினிலே உள்நின்றாள்.அவள் அம்மை அம்மை எம்மைநாடு பொய்வென்றாள் ‘அகத்தகத்தகத்தினிலே’:அகத்தின் அகத்து அகம்.மனித அகம் என்றாலும் அல்லது இவ் அண்டத்தின்…

தொல்காப்பியம் கூறும் உலக வழக்கு – நாடக வழக்கு

நாடக வழக்கு உலக வழக்கு என்ற சொற்பதங்களை தொல்காப்பிய இலக்கணநூல் பொருளதிகாரத்திற் பேசுகிறது. தொல்காப்பியம் கூறும் வழக்குகள் நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்பாடல் சான்ற புலனெறி வழக்கம்கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்உரிய தாகும் என்மனார் புலவர்(தொல்: பொருள்: அகத்: 56) இலக்கியம் சார்ந்த புலனெறி வழக்கத்தை, நாடக வழக்கிலோ, உலகியல் வழக்கிலோ சொல்லும் பொழுது, கலிப்பாடல், பரிபாடல் என்ற இரு வடிவங்களும் ஏற்றதாக இருக்கின்றன என்று புலவர்கள் சொல்கின்றனர். விளக்கவுரை புலநெறி வழக்கத்தை, நாடகவழக்கு எனப்படும் இலட்சியப்படுத்தப்பட்ட…