மனோரமா பிஸ்வால் – மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள் – பகிர்வு 8
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” – பாரதி மிக அருகில் இருந்து ஆடித்திருவதைப்போல் நட்சத்திரங்கள், கைபிடித்துவரும் ஒற்றையடிப் பாதையின் காற்று, நிலா முட்டும் குடிசைகள், பொத்தான் தொலைத்து கோணலாக இழுத்துக் குத்தப்பட்ட காற்சட்டைச் சிறுசுகள், ஜன்னல் அருகில் காற்று வாங்கத் துடிக்கும் பாவாடை பூக்கள், மஞ்சள் பூசி வளைய வரும் ஆறுகள் எல்லாம் படியேறி எங்கே ஓடிவரப்போகிறது நாற்சுவரல் ஒடுங்கிவிட்ட எம் நகரத்து வாழ்க்கைக்கு? ஓரியாவிலிருந்து ஒரு குட்டிக் கிராமத்தையே நம்…









