வீடு
இப்போதெல்லாம் வீடுகள் மிகவும் வெறுமையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். இங்கு, புதிது புதிதாய் கட்டப்படும் வீடுகள் எல்லாம் வெள்ளை நிறச் சுவர்களையே அதிகமாக் கொண்டிருக்கின்றன. பொருட்களைக் குறைத்து வெள்ளை நிறச் சுவர்களை வெறுமனே விட்டு வைப்பதே நாகரிகம் என்று ஆகிவிட்டது. இருக்கையும் முன் மேசையும் அதில் ஒரு மெழுகு திரிக் குவளையும் முகட்டின் உள்ளே பொருத்தப்பட்ட விளக்கும் போதுமானதாக இருக்கிறது. இருக்கையின் பின்புறமோ, தூரமாகவோ ஒரு கலைத்துவமிக்க படம் வெகு கவனத்துடன் மாட்டப்பட்டிருக்கிறது. அது கலைத்துவம் மிக்கது என்பதைவிட…









