பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு’

பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு’ பாரதியின் பாடல்களை அசைவுகளால் காட்சிப்படுத்தும் முயற்சியில் இந்தப் பாடல் நடனமமைக்கப்பட வேண்டுமென்பது நீண்டநாள் ஆசை. இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது. இது முன்னோட்டம்.விரைவில் நோர்வேயின் கிழக்கு மலைக்குன்றுகளில் காட்சிப்படுத்தப்பட்டு முழுப் பாடற்காணொளி வெளிவரவுள்ளது. அஸ்வமித்ரா இசையில், கிரனின் குரலில், கணேஸின் சொற்கட்டுக்களோடு உயிர்பெறக் காத்திருக்கிறது.ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு கலாசாதனா கலைக்கூடம்

எகிப்து

எகிப்துபயணங்களும் பதிவுகளும் பயணத்தின் அனுபவங்களையும், அதிர்வுகளையும் சேகரித்து வைப்பதே இதுவரை எனது வைப்பில் இருக்கும் மிகப்பெரும் சொத்துக்கள். முதன் முதலாக எகிப்து பற்றி அறிமுகமாகும் போது எனக்குப் பத்து வயது. ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் சொல்லித்தந்த வரலாற்றுப் பாடத்தில் தான் எகிப்து பற்றியும் உலகின் தொன்மையான சமூகம் ஒன்று வாழ்ந்து பயிர்த்தொழில் செய்யத் தொடங்கிய இடத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அப்போதே அந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 2018- இல் எகிப்துக்குச் செல்லும்…

நோர்வேயின் அரச நூல்வர்த்தக இல்லம் -Bokhandelens hus

Bokhandelens hus நோர்வேயின் அரச நூல்வர்த்தக இல்லம் (bokhandelens hus) 1851 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒன்று. நோர்வே நாட்டில் வெளியிடப்படும் நூல்களை மேம்படுத்துவதும், ஆவணப்படுத்திப் பாதுகாப்பதும், நோர்வேஜிய மொழியின் இலக்கியத் தரத்தை, சமூகத்தில் புத்தகங்களுக்கான இடத்தை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கின்றது. எழுத்தாளர்களும் அவர்கள் தொடர்பான ஆவணங்களும் காணக்கிடைக்கின்றன. முக்கியமான அனைத்து பதிப்பகங்களும், புத்தகக்கடைகளும் இந்நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கின்றனர்.புத்தகங்கள் தொடர்பான, கடைகள், வெளியீட்டாளர்கள், புத்தகம் தொடர்பான வர்த்தக கல்வியில் நாட்டமுள்ளோர், அனைவருக்குமான தொழில்முறைக்கல்வியும் இங்கே ஒரு…

நிறமற்றுப் போன கனவுகளோடு நோர்வே நாட்டில் ஒரு ஈழத்துக் கவிஞன்

கத்தரிக்கப்பட்ட சொற்களுக்கும் காத்திரமான வரிகளுக்கும் சொந்தக்காரன். கவிஞர் இளவாலை விஜயேந்திரன் கவிதைகள்   உணர்வின் வெளிப்பாட்டில் நிகழும் வடிவமாய்க் கவிதைகள் இன்று காத்திரமானதாய் எழுந்து நடைபோடும் காலமிது. தோழில்நுட்பம் அறிவியல் என்று பல மைல்கல்லைத் தாண்டி வேகமாக பயணிக்கும் இன்றைய யதார்த்த உலகிலும், நெருக்கடி மிகுந்த இந்தத் தருணங்ளிலும் இயற்கை, சூழல், சமூகம் குறித்த குறிப்புகளோடு கவிஞர்கள் தமது அக்கறையையும், கருத்துக்களையும் பகிர்ந்த வண்ணமே உள்ளனர். நம் கண்முன் கரைந்து காணமல் போகும் கணப்பொழுதுகளைக் காப்பாற்றி மீண்டும் எம்முன்…

Preikestolen – Stavanger, Norway

  சென்றவருடம் இலையுதிர்காலம், Preikestolen (Preacher’s Chair- Stavanger) என்னும் இடத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நடனம் இது. நேரமின்மை காரணமாக கிடப்பில் இருந்து தற்போது தொகுக்கப்பட்டுள்ளது. Preikestolen பாறைக்கு ஏறிச் செல்வதே ஒரு பேரனுபவம். குறைந்த பட்சம் இரண்டு மணிநேரங்கள் ஏறவேண்டும். ஒரு வருடத்தில் ஏறத்தாழ மூன்று லட்சம் மனிதர்கள் இங்கே சுற்றுலா வருகின்றனர். காலை ஒன்பது பத்து மணியளவில் இவ்விடத்தில் மனிதர் கூடிவிடுவர் என்பதால் விடிகாலை ஐந்தரை மணியளவில் கிளம்பி எட்டு மணியளவில் மேலே சென்றடைந்தோம்.…

வீடு

இப்போதெல்லாம் வீடுகள் மிகவும் வெறுமையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். இங்கு, புதிது புதிதாய் கட்டப்படும் வீடுகள் எல்லாம் வெள்ளை நிறச் சுவர்களையே அதிகமாக் கொண்டிருக்கின்றன. பொருட்களைக் குறைத்து வெள்ளை நிறச் சுவர்களை வெறுமனே விட்டு வைப்பதே நாகரிகம் என்று ஆகிவிட்டது. இருக்கையும் முன் மேசையும் அதில் ஒரு மெழுகு திரிக் குவளையும் முகட்டின் உள்ளே பொருத்தப்பட்ட விளக்கும் போதுமானதாக இருக்கிறது. இருக்கையின் பின்புறமோ, தூரமாகவோ ஒரு கலைத்துவமிக்க படம் வெகு கவனத்துடன் மாட்டப்பட்டிருக்கிறது. அது கலைத்துவம் மிக்கது என்பதைவிட…

விஜயநகரப் பேரரசு – 2 – சுலே பஜார்/ சூலை பஜார் ( Harlots Market)

ஹம்பியில் நான் பார்க்க விரும்பிப் போன இடம் சுலே பஜார்/ சூலை பஜார். ஹம்பியில் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தேவரடியார்கள் வாழ்ந்த இடம் இது. தேவரடியார்கள் பின்னைய காலங்களில் தேவதாசிகள் எனவும், தாசிகள் எனவும் அழைக்கப்பட்டது வேறு கதை. இந்தியச் சுதந்திரப் போராட்டகாலத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தபோது தேவதாசி தொடர்பாக சமூகம் கொண்டிருந்த பார்வைக்கும் அதற்கு முந்தயை காலங்களில் தேவரடியார் மீது சமூகம் வைத்திருந்த பார்வைக்கும் வேறுபாடுகள் இருந்தன. கோவில்கள் நிறுவனமயமாக்கப்பட்ட காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும்…

விஜயநகரப் பேரரசு – 1 ‘ஹசார ராமா கோவில் ‘

ஹம்பியில் அமைந்துள்ள கலையம்சம் மிக்க ஒரு அழகிய கோவில் ஹசார ராமா கோவில். இது விஜயநகர அரச குடும்பத்தினரின் தனிப்பட்ட வழிபாட்டுத்தளமாக இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஹம்பியில் உள்ள கோவில்களுள் சிறிய அளவிலான கோவிலாக இருந்தாலும் ஏனைய கோவில்களில் இருந்து சற்று மாறுபட்டதாகத் தெரிகிறது. ஹசார ராமா கோவில் பதினைந்தாம் நூற்றாண்டின் காலப்பகுதியில், இரண்டாம் தேவராயரால் கட்டப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஹம்பி உலகில் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளங்கள் மிக்க நகராகவும் இருந்திருக்கிறது. நீண்ட கடைத்தெருக்கள்…

அடைமழைப் பொழுதுகளில்…

எல்லாம் மனது ஏதோ ஒன்றை நினைத்து ஏங்கத் தொடங்கி விடுகிறது. சடசடவெனக் கொட்டி, மழை போடும் கூரைச் சத்தத்தைக் கேட்டு, விடுபட்டதொரு இறகினைப்போல மனம் அமைதியாகிவிடுகிறது. மேலும் இக்கணங்களெல்லாம் ஏன் உன்னையே நினைவுபடுத்துகிறது சொல்! இலைகளின் முனைகளில் இருந்து கொட்டும் ஒவ்வொருசொட்டும் எத்தனை சுவர்கள் தாண்டியும் வந்துவிடுகிறது. அந்தச் சலசலப்பு அதுதான் உன் நினைவுகள்போல அவை எதையும் ஊடுருவிச் சேரவல்லது. நீ அறியாததா என்ன! மழைநாள் எத்தனை அழகானதோ, அத்தனை விசித்திரமானதும் கூட! இப்போது பார் இந்தத்…