சிவரமணி – சமுதாயச் சிலுவையைச் சுமந்து வாழ்ந்த பெண் கவி – பகிர்வு 2

சமுதாயச் சிலுவையைச் சுமந்து வாழ்ந்த பெண் கவி    வரலாறிக்கு முன்னான காலப்பகுதியெனக் குறிக்கப்படும் குழு நிலைச் சமூக அமைப்பு நிலவிய காலத்திலாயினும், சாம்ராஜ்யங்கள் கோலோச்சிய நிலப்பிரபுத்துவ மன்னர் காலமாயினும், சங்கம் அமைத்து அறநெறி கூறிய வரலாறு தமிழ் இலக்கியத்திற்கு உண்டு. இச்சங்கங்கள் முறையே முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என குறிப்பிடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் காணக்கிடைக்கும் இலக்கியங்கள் அனைத்தும் கடைச்சங்கத்தில் ஆக்கப்பெற்ற நூல்கள்தான் என்று நம்பப்படுகிறது. முதல் இரு சங்கங்களில் ஆக்கப்பட்டவை அனைத்தும் கடல் நிரப்பரப்பை ஆக்கிரமித்தபோது…

பாரதி – கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் ஒர் தொடர் பயணம் – பகிர்வு 1

நான் எழுதுவதை விட எழுத நினைப்பது அதிகம். எத்தனை கவிதைகள் எழுதி முடித்தாலும் சில கவிதைகளைப் படிக்கும் போது இந்தக் கவிதைகளை நான் எழுதவில்லையே என்ற ஆதங்கம் ஆழ்மனதில் ஊர்ந்து போகும். மரபுக்கவிதைகளில் இருந்து புதுக்கவிதையில் வடிந்து ஹைக்கூக்கள் வரை கவிதைகளில் பல விதங்கள் இருந்தாலும் இந்த அவரசர வாழ்க்கையில் நான் விரும்பி ஒரு சில நொடியாவது நின்று வாசித்துப் போவது அதிகம் புதுக்கவிதைகள் தான். அப்படி நின்று படித்து சுவைத்த கவிதைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த…