மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை – பகிர்வு 12
மழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் காலை விடிந்தது. கவிதை என்பது உணர்வு. கல்விக்கூடங்கள் மூலமோ பயிற்றுவிப்புகள் மூலமோ நாம் கவிதையையோ கவிஞர்களையோ மல்லுக்கட்டி இழுத்துவர முடியாது. வாழ்வின் பெருநிலத்தில் உளவியல் விதைகளாலும் அனுபவ உரத்தினாலும் உழுது பயிரிட்ட உணர்வுகளின் அறுவடை கவிதை. விரிந்த ஆய்வும் ஆழமான தேடலும் இல்லாமல்…









