நிறமற்றுப் போன கனவுகளோடு நோர்வே நாட்டில் ஒரு ஈழத்துக் கவிஞன்

கத்தரிக்கப்பட்ட சொற்களுக்கும் காத்திரமான வரிகளுக்கும் சொந்தக்காரன். கவிஞர் இளவாலை விஜயேந்திரன் கவிதைகள்   உணர்வின் வெளிப்பாட்டில் நிகழும் வடிவமாய்க் கவிதைகள் இன்று காத்திரமானதாய் எழுந்து நடைபோடும் காலமிது. தோழில்நுட்பம் அறிவியல் என்று பல மைல்கல்லைத் தாண்டி வேகமாக பயணிக்கும் இன்றைய யதார்த்த உலகிலும், நெருக்கடி மிகுந்த இந்தத் தருணங்ளிலும் இயற்கை, சூழல், சமூகம் குறித்த குறிப்புகளோடு கவிஞர்கள் தமது அக்கறையையும், கருத்துக்களையும் பகிர்ந்த வண்ணமே உள்ளனர். நம் கண்முன் கரைந்து காணமல் போகும் கணப்பொழுதுகளைக் காப்பாற்றி மீண்டும் எம்முன்…

பாரதியும் புதுமைப்பித்தனும்

புதுமைப்பித்தனும் பாரதியும் எப்படி ஒரே பேசுபொருளை இரண்டு வேறுபட்ட இலக்கிய வடிவங்களுக்கூடாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரசியமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இவர்கள் வெவ்வேறு இலக்கிய வடிவங்களை மட்டும் கையில் எடுக்கவில்லை. எடுத்த விடயத்தைப் பார்க்கும் விதமும் அதைக் கையாளும் முறையும் மிக மிக வேறுபட்டிருக்கிறது. பாரதியோ காதல் குணம் படைத்தவன். அவனுடைய வடிவமோ ஒன்றிப் போவது. இதயத்திலிருந்தே விடயங்களைக் கையாள்வது. காதலும், ஆன்மீகமும், தத்துவமும் கூடிக் கவி செய்வது. கவிதையில் ஓசையும், அழகும், ஆழமும் கொண்டுவரும் கவிதைச்…

குழந்தைப்போராளி

சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம்

எமது சிந்தனைச் சேமிப்புகளின் உலகப்பெரும் வங்கி.

நோர்வேஜிய மொழி: Jan Vincents Johannessen  தமிழ்: கவிதா (நோர்வே)   கலைஞராக கடல்வணிகராக விவசாயியாக அல்லது விஞ்ஞானியாக, நாம் யாராக இருந்தாலும், யாரோ ஒருவரின் பிரதிபலிப்பாகவே நாம் இருக்கின்றோம். யாரினுடைய பிம்பமாக நாங்கள் இருக்கப் போகிறோம் என்பது மட்டுமே எம்மால் தீர்மாணிக்கப்படுகின்றது. நாம் ஒரு குழுவில் எம்மை இணைத்துக்கொண்டு செயற்பட்டு வருவதென்பது எமது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றது. நாமும்  சரி அக்குழுத் தலைமைகளும் சரி குழுவின் முக்கிய கொள்கைகளை மீறாதிருப்பது கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகிவிடுகிறது. நாம் இணைந்துகொண்ட குழுவின்…