சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்
தென்னக ஓவியக்கலைகளின் முன்னோடியாக இருப்பது சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள். கி.பி ஏழாம் நூற்றாண்டின் இடைக்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குடைவரை ஓவியங்கள் இன்றும் இங்கு காணக்கிடைக்கிறது. இந்தியாவில் இரண்டு இடங்களில் தொன்மை வாய்ந்த ஓவியக்கலைகளைக் காணலாம். அதில் ஒன்று அஜந்தா மற்றொன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அமைந்த சித்தன்ன வாசல். ’சித்தன் கிரி வாசல்’ என்ற பெயரிலும், ’சிறிய அன்னல் வாழிடம்’ என்ற பெயரிலும் பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு சித்தன்ன…







