ஊர் – Conques

சென்ற நடைப்பயணத்திலேயே பிடித்த கிராமத்தின் பெயர் கொங்க்ஸ். பேரழகு வாய்ந்ததொரு கிராமம். கிராமத்தின் அழகை என்னிடம் உள்ள சொற்களை கொண்டு வர்ணித்து விட முடியாதிருக்கிறது. அக்கிராமம் ஒரு மலையின் இடுக்கில் இருக்க, மலைத் தாழ்வாரத்தில் மிக அழகிய நதி ஒன்றும் அதன் மீது கடந்து செல்கிறது. பழமை வாய்ந்த பாலம் ஒன்றும் அழகின் முத்தாய்ப்பாய் காணக் கிடைக்கின்றது. கிராமத்தைச் சுற்றி மலை காடுகள் பச்சை பசேல் என்று விரிந்து கிடக்கிறது. ஆங்காங்கே முகில்களை தமக்குள் உறிஞ்சி கொண்டிருந்தபடி…

தலைகீழாக வைக்கப்பட்டிருந்த ஊர்ப் பெயர்ப்பலகைகள்

இந்த ஆண்டின் நடைப்பயணம் சென்ற ஆண்டைப் போலில்லாமல், மிகவும் ஒரு சவாலான யாத்திரையாக அமைந்தது. இரண்டு வாரமாக 350 கி. மி தூரத்தை நடந்திருக்கின்றேன். பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து சன்டியாகோ தி கொம்பஸ்தெல்லா நோக்கி பயணிப்பதே இலக்கு.. நாளும் ஒரு மலையைக் கடந்தாக வேண்டும். ஒவ்வொரு மலைத் தாழ்வாரங்களிலும் ஒரு குட்டிக் கிராமம் எமக்காகக் காத்திருந்தது. சில வேளைகளில் இரண்டோ மூன்றோ மலைகளைத் தாண்டி, மூன்று கிராமங்களைத் தாண்டியும் பயணம் நீண்டது. எனக்கு நடை…

சூனியக்காரியின் பதக்கம்

சென்ற ஆண்டு நான் நடைப்பயணம் சென்றிருந்தேன். நடைப்பயணம் பற்றி எழுத ஏராளமானவை உண்டு என்றாலும் என்னை மனதளவிற் பாதித்த, என்னைச் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. போர்த்துக்கல்லில் இருந்து ஸ்பெயின் நாட்டில் போய் முடிவடைந்த நடைப்பயணம். அது சண்டியாகோ டி கொம்பஸ்டெல்லா என்ற பழைமையான சிறப்புமிக்க ஒரு தேவாலயத்திற் சென்று நிறைவடைந்தது. தேவாலயக் கதைகள், வரலாறு என்பவை ஒருபக்கம் இருக்கட்டும். தேவாலயத்தினைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கடைத்தெருக்களைப் பார்க்கும் ஆவல் வயதுவந்த பின்னரும் விட்டுவைப்பதில்லை.…

சிப்பியும் சூனியக்காரியும்

(பயணம் 1 ) பயணங்களைப் பற்றி எழுதுவது என்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகவே நான் கருதுகிறேன். பயணங்களை நாம் எழுதும் போது அங்குள்ள தகவல்களைத் தரும் ஒரு கட்டுரையாக எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. இன்றைய தகவற் தொழில்நுட்பக் காலத்திற் தகவல்களை நாம் இணையத் தளங்களிலேயே பெற்றுக் கொள்ள முடியும். ஒரு பயணத்தின் போது மனிதன் எதைப் பெற்றுக் கொள்கின்றான்? பெற்றுக் கொள்கின்றானா… இல்லவே இல்லை. அவன் தன்னை இழக்கத் தொடங்குகிறான் என்பதே முதன்மையானது. ஒரு பயணத்தில்…