ஆன்மீகம் – மெய்யியற்தேடல்

ஆன்மீகம் – மெய்யியற்தேடல் …… இந்தியக் கலைமரபு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பலரும் சொல்லும் விடயங்களில் முதன்மையானது ஆன்மீகம். மனித புத்திக்கு எட்டாத, அப்பாற்பட்ட விடயங்கள் என்று மனம் கருதும் விடயங்களை நோக்கிய தேடலே ஆன்மீகம். ஆன்மாவினூடு நடைபெறும் தேடல் என்பது அதன் பொருள். இந்தியக் கலை மரபிலிருந்து ஏனைய கலை மரபுகளை வேறுபடுத்திக் காட்டும் தன்மையுடையது ஆன்மீகம். எனினும் ஏனைய நாட்டுக் கலைமரபுகளில் ஒட்டுமொத்தமாக ஆன்மீகம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்தியக் கலைமரபில் ஆன்மிகம்…

தொல்காப்பியம் கூறும் உலக வழக்கு – நாடக வழக்கு

நாடக வழக்கு உலக வழக்கு என்ற சொற்பதங்களை தொல்காப்பிய இலக்கணநூல் பொருளதிகாரத்திற் பேசுகிறது. தொல்காப்பியம் கூறும் வழக்குகள் நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்பாடல் சான்ற புலனெறி வழக்கம்கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்உரிய தாகும் என்மனார் புலவர்(தொல்: பொருள்: அகத்: 56) இலக்கியம் சார்ந்த புலனெறி வழக்கத்தை, நாடக வழக்கிலோ, உலகியல் வழக்கிலோ சொல்லும் பொழுது, கலிப்பாடல், பரிபாடல் என்ற இரு வடிவங்களும் ஏற்றதாக இருக்கின்றன என்று புலவர்கள் சொல்கின்றனர். விளக்கவுரை புலநெறி வழக்கத்தை, நாடகவழக்கு எனப்படும் இலட்சியப்படுத்தப்பட்ட…

தமிழ்வழி நடனம் அறிய விரும்புபவர்களுக்கான ஒளிப்பதிவு – பகுதி 1

தமிழ்வழி நடனம் அறிய விரும்புபவர்களுக்கான ஒளிப்பதிவு. பிண்டி – பிணையல் – எழிற்கை – தொழிற்கை – பொருட்கை போன்ற தமிழ்வழிச் நாட்டியச் சொற்களுக்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.

நடம்புரி – ‘தமிழ்வழி ஆடல்’

நடம்புரி – ‘தமிழ்வழி ஆடல்’ எனும் படைப்பாக்கத் திட்டத்தின் மூலம் நம் தமிழ் மரபின் வழி வந்த சிந்தனையை, சொற்களை, அழகியலை, கலைத்துவத்தை அறிமுகம் செய்ய விழைகின்றோம். இப்பதிவுகளின் வழியாக தமிழ்வழி நாட்டியத்திற்குரிய கைகள், அசைவுகள், மெய்ப்பாடுகள், கோட்பாடுகள், வரலாற்றுப் போக்குகள், தத்ததுவார்த்த சிந்தனைகள் ஆகியவை தொடர்பாகப் பேசவுள்ளோம். தொல்காப்பியம், கூத்த நூல், பஞ்சமரபு, சிலப்பதிகாரம் மற்றும் பல தமிழ் நூல்களின் வழி – இப்பாடத் திட்டத்தினை ஒளி-ஒலி வடிவத்தினூடாக உங்களுக்கு அளிப்பதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.…