ஹம்சகீதே – ஒரு இசைக்கலைஞனின் கதை

ஹம்சகீதே பொதுவாக நாவல்கள் திரைக்கதையாக மாறும் போது படைப்பு முழுமையடைவில்லை என்றே தோன்றும். மோகமுள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற தமிழ்த் திரைப்படங்கள் அதற்குச் சாட்சி சொல்லும். ஹம்சகீதே என்ற நாவலைத் திரைப்படமாக்கியவர் இயக்கியவர் ஜி.வி.ஐயர். நல்லவேளையாக நான் ஹம்சகீதே நாவலைப் படிக்கவில்லை. நாவலைப் படிக்காமல் திரைப்படத்தைப் பார்த்த வகையில் முழுமையான படைப்பென்றே சொல்லவேண்டும். ஹம்சகீதேவை எனக்குப் பிடித்துப்போனதற்குப் பல காரணங்கள் உண்டு. ஹம்சகீதே அகம் சார்ந்த கதை. இசை, நடனம், வரலாறு என்ற கூறுகளை…

ஞானரதம்

ஞானரதம் பாரதி கவிதைகளைப் போலவேதான் பாரதியின் உரைநடைகள், கதைகள், குறுநாவல்கள் அனைத்தும் ஞானத்தேட்டத்திற்கானவை. ஆனாலும் பாரதி கவிதைகளைப் போல அவை வாசிப்புப் பெருவெளியை இன்னும் சென்றடையவில்லை என்பது என் எண்ணம். ’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை. குறுநாவல். தத்துவ விசாரணை. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே அவ்வப்போது கற்பனையிற் கண்ட புதிய உலகொன்றில் சஞ்சாரம் செய்வதுண்டு. அப்படியான ஒரு சஞ்சாரப் பொழுதில் பாரதி பற்பல உலகங்களில் பறந்து திரிந்து யாத்த கற்பனைச் சித்திரந்தான் ஞானரதம். வாழ்வின் உன்னத கணமொன்றைத்…

செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்”என்ற தலைப்பில் பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.  … எனது அன்பான சகோதரர்களே!! குழந்தைகளே!!!  என்னிடம் எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். °மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.  நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது,…

பாரதி மறந்த ஆசைமுகம்….

ஒரு தேடல்கவிதா லட்சுமி பாரதியின் கவிதைகளில் அதீத காதலுள்ளவள் நான். சில பாடல்களை வருடக்கணக்கில் இரைமீட்டுக் கொண்டிருப்பேன். அப்படியாக என்னை அலைக்கழித்த பாடலில் ஒன்று ‘ஆசைமுகம் மறந்து போச்சே’. பல வருடங்களாக இதன் பொருளைத் தேடி அலைந்திருக்கிறேன். பாரதியின் கவிதைகள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை. சொற்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை அடுக்கும் முறையிலும் அதன் எளிமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். எளிய இனிய சொற்களைக் கொண்ட கவிதைகளாயினும் அக்கவிதைகளின் பொருளுணர்ந்து கொள்வது பெரும்பாலும் அத்தனை இலகுவானதல்ல. பாரதியின்…

Gejje Pooje (சலங்கை பூஜை) காட்டும் தேவதாசிச் சமூகம்

தேவரடியார் மரபினை பேசும் படங்கள் தமிழில் மிகக் குறைவு. இது கன்னடப்படம். கோயில் தேவதாசி மரபுத் தடைச்சட்டம் இந்தியவில் அமுலுக்கு வந்த பின் எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த வகை தேவரடியார்கள் தம் கலை வாழ்வை காலத்தால் மறந்துவிட்டவர்கள். பிரபுக்களும், ஜமின்தார்களும் போலவே பிராமணர்களும் தேவரடியார்களை தமது பெண்களாக பரிசம் போட்டு வைத்துக்கொள்வது அன்றைய கால வழக்கு. இந்தப்படம் காட்டும் தேவரடியார் குடும்பம் சற்று வளமானது. ஒருகாலத்திற்கு ஒருவர் பெண்ணை தாசியாக வைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டவர்கள்.  பாட்டி, தாய்,…

முதியவர்களுக்கென ஒரு குட்டிக்கிராமம் – Norway

முகநூலில் நான் அவசரமாகக் கடந்து செல்லும் சில ஒளிப்பதிவுகள் இருக்கின்றன. அவைகளில் முதன்மையாக இருப்பது முதுமையில் சில மனிதர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் காட்சிப்படுத்திய பதிவுகள்தாம்.  அசையக்கூட முடியாத மூதாட்டிகளை அடிப்பதும், உதைப்பதும், பலங்கொண்ட மட்டும் இழுத்துவீசுவதும் பார்த்திருக்கிறேன். அது ஏற்படுத்தும் வலியாலும், செயலற்ற எனது நிலையாலும், அவசரமாகத் தாண்டிச் செல்ல முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடிந்ததில்லை.கொடுமைகளை அனுபவிக்கும் முதியவர்களுக்கு முதுமையில் வரும் மறதி என்பது ஒரு வரமாகவும் இருக்கக் கூடும். மறதி என்பது எந்த…

ஆடற்கலையும் ஆத்ம தேடலும்

பிரபஞ்சம் யாவுமே கூத்தென்றால் உலகின் யாவையும் நடம் செய்வோம்!  ஆடற்கலையும் ஆத்ம தேடலும் —————————- பெண்களுடன் மாயக்கண்ணன் செய்யும் சில்மிஷங்களையும், சிருங்கார லீலைகளையும் பெருமையோடு ஏற்றுக் கொள்ளும் சமூகம், சூர்ப்பனகைகளின் மூக்குகளை மட்டும் அறுத்து அனுப்பிக் கொண்டே இருப்பதைப்பற்றி நாம் சிந்தித்ததுண்டா? நாட்டியக்கலை உடல் அசைவுகளாலான தொன்மை வாய்ந்ததொரு மொழி வடிவம். நாட்டிய மொழியினூடு முன்னெடுக்கப்படும் கலை வடிவமும் அதன் பேசுபொருளும் இரண்டு வேறுபட்ட விடயங்கள். கலை வடிவம் என்பது கட்டுமானம். பேசு பொருள் என்பது மனித…

ஊழிக்கூத்து – உணர்ந்தார்க்குப் பேரனுபவம்!

கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்று பாரதியின் பல படைப்புகள் அவனின் கவித்திறனை பறைசாற்றிய போதும், தனிப் பாடலாக உச்சத்தைத் தொட்ட கவிதைகளுள் அவனின் ஊழிக்கூத்து சிகரமாக நிற்கின்றது. ஆழ்ந்த பொருளுள்ள பாரதியின் கவிதைகளில் ‘ஊழிக்கூத்து’ மிகவும் தனித்துவமிக்கது. தெய்வப் பாடல்கள் என்ற பகுப்பில் இக்கவிதையைச் சேர்த்திருப்பது எத்தனை தூரம் பொருந்தும் என்பதை இக்கவிதையை படித்துணர்ந்தவர்களின் முடிவிற்கே விட்டு விடுதல் நன்று. இப்பாடலின் உட்பொருளாகி ஆடும் அன்னை பிரபஞ்ச சக்திகளின் மூலம். மூலசக்தி! அவள்…

ஒரேயொரு கையேடுதான் எம்மிடம் இருக்கிறது. அது சலிப்பூட்டுகிறது.

நமது சமூகத்தில் ஒரு நபரை இழிவுபடுத்த வேண்டும், காயப்படுத்த வேண்டும், ஒதுக்கி வைக்க வேண்டும் என்றால் எல்லாவற்றிற்கும் ஒரே கையேடு தான் பாவிக்கப்படுகிறது. அதிலும் இரண்டே இரண்டு விடயங்கள் தான் கையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சாதாரணக் குடிமகன்களில் இருந்து பெரியார் வரை இந்த ஒரு விடயம்தான். ஆணாக இருந்தால், பெண்கள் விடயத்தில் ஆள் சரியில்லை என்று காட்ட முயல்வது. பெண்ணாக இருந்தால் ஆண்கள் விடயத்தில் சரியில்லை என்று காட்ட முயல்வது. அல்லது ஏதும் பணம் தொடர்பாக கொள்ளையடித்தார்கள்,…

மனித மனதின் மூலங்களை நுட்பமாகத் தொட்டுச்செல்லும் தொல்காப்பியம்

மனித மனதின் மூலங்களை நுட்பமாகத் தொட்டுச்செல்லும் தொல்காப்பியம் (தொல்காப்பியம் – பொருளதிகாரம் – களவியல்) களவு என்பதின் வினை அடி கள்ளுதல். கள்ளுதல் – கவருதல். ஒருவருடைய உயிரை இன்னொருவர் கவருதல். (களவாடுதல், களவு செய்தல் எனும் பொருள்படும்.) இரண்டு அகங்கள் சேருகின்ற அகச் சேர்க்கையின் மனம் புணர் உணர்வே களவியல். ”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக்கூட்டம் காணுங்காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.…