நூலைப்படி!

நூலைப்படி! நூலைப்படி — சங்கத்தமிழ்நூலைப்படி — முறைப்படிநூலைப்படி காலையிற்படி கடும்பகல்படிமாலை, இரவு பொருள்படும் படிநூலைப்படி பாரதிதாசன் தனது பாடலில் நூலைப்படி என்று வெறுமாகக் சொல்லவில்லை, குறிப்பாக சங்கத்தமிழ் நூலைக் குறிப்பிட்டுச் சொல்வது குறிப்பிடத்தக்கது. அதையும் முறைப்படி, பொருள் விளங்கும் படி படிக்கச் சொல்கிறார். தொல்காப்பியம் தொடங்கி, சங்கக்கவிதைகள், சங்கமருவியகாலத்துக் காப்பியங்கள் வரையான நூல்களைக் கைகாட்டுகிறார். தொல்காப்பியத்திற்கும், சங்கக்கவிதைகளுக்கும் அத்தனை முக்கியத்துவம் ஏன்? எல்லாமொழிகளும் சிறந்தனவே. உலகின் அனைத்து மொழிகளுக்கும் இலக்கண நூல் இருப்பது வழமையே. ஆனாலும் தமிழ்…

ஊர் – Conques

சென்ற நடைப்பயணத்திலேயே பிடித்த கிராமத்தின் பெயர் கொங்க்ஸ். பேரழகு வாய்ந்ததொரு கிராமம். கிராமத்தின் அழகை என்னிடம் உள்ள சொற்களை கொண்டு வர்ணித்து விட முடியாதிருக்கிறது. அக்கிராமம் ஒரு மலையின் இடுக்கில் இருக்க, மலைத் தாழ்வாரத்தில் மிக அழகிய நதி ஒன்றும் அதன் மீது கடந்து செல்கிறது. பழமை வாய்ந்த பாலம் ஒன்றும் அழகின் முத்தாய்ப்பாய் காணக் கிடைக்கின்றது. கிராமத்தைச் சுற்றி மலை காடுகள் பச்சை பசேல் என்று விரிந்து கிடக்கிறது. ஆங்காங்கே முகில்களை தமக்குள் உறிஞ்சி கொண்டிருந்தபடி…

இப்சனுடனான பொழுதுகள் (பருவம் – 2)

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் இரண்டுஇடம்: கிரிம்ஸ்தா முதற் குழந்தை – முதற் காதல் – முதல் நூல் கிரிம்ஸ்தா நகரம், எனது இருப்பிடத்திலிருந்து குறைந்தது நான்கு மணிநேரப் பயணத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் கோடைகாலம் கிரிம்ஸ்தா நகருக்குச் செல்லும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தது. பயணம் நீண்டதெனினும் மிகச் சுவாரிசியமானதும் அழகானதுமாக அமைந்தது. வழிநெடுகிலும் இயற்கையின் பேரருள். இப்சன் பணிபுரிந்த மருந்தகத்தின் எதிரிலேயே ஒரு தங்குமிடம். பேரானந்தம் எனக்கு. பழங்காலத்து தளபாடங்களுடன் அமைக்கப்பட்ட அறை. ஓர் இரவுக்குள் ஒரு…

இப்சனுடனான பொழுதுகள்

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் ஒன்றுஇடம்: ஷீயன் ……… கலைஞர்களும் இலக்கியவாதிகளும் ஹென்றிக் இப்சனைத் அறியாது இருப்பது அரிது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்துப் பெரும் நாடக எழுத்தாளராக அறியப்படுபவர் இப்சன். மேடைநிகழ்வு சார்ந்தோ, மொழிபெயர்ப்பு சார்ந்தோ ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு படைப்பாக்கம் அவருடைய எழுத்துகளைக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் அருங்காட்சியகத்தில் சொல்லபடுகிறது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்து மிக அதிக அளவில் இப்சனுடைய நாடகங்களே மேடையேற்றப்படுகின்றன. ஷேக்ஸ்பியர் இப்சனுக்கு 300 ஆண்டுகள் முந்தையவர் என்பதும் இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது. இப்சனுடைய…

கொஞ்சம் நான் கொஞ்சம் கலை

நேற்று உலக நாடக நாள். நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக நாட்டியம் கற்கத் தொடங்கினேன். பரதநாட்டியம் கற்பதிற் பயனில்லை. நாட்டியக்கலை மதம் சார்ந்த சடங்குகளாகவே இருக்கிறது என்பதால் வீட்டில் மாமாக்களுக்கு நாட்டியத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்கவில்லை. கராத்தே கற்றுக்கொடுத்தாற் கூட பயனுண்டு என்ற வாதமும் உரையாடலும் வீட்டில் நடைபெற்றது. நான் நாட்டியம் கற்றது எனது தனிப்பட்ட விருப்பின்…

சூனியக்காரியின் பதக்கம்

சென்ற ஆண்டு நான் நடைப்பயணம் சென்றிருந்தேன். நடைப்பயணம் பற்றி எழுத ஏராளமானவை உண்டு என்றாலும் என்னை மனதளவிற் பாதித்த, என்னைச் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. போர்த்துக்கல்லில் இருந்து ஸ்பெயின் நாட்டில் போய் முடிவடைந்த நடைப்பயணம். அது சண்டியாகோ டி கொம்பஸ்டெல்லா என்ற பழைமையான சிறப்புமிக்க ஒரு தேவாலயத்திற் சென்று நிறைவடைந்தது. தேவாலயக் கதைகள், வரலாறு என்பவை ஒருபக்கம் இருக்கட்டும். தேவாலயத்தினைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கடைத்தெருக்களைப் பார்க்கும் ஆவல் வயதுவந்த பின்னரும் விட்டுவைப்பதில்லை.…

‘கண்ணகி’ திரைப்படத்தை முன்வைத்து

எது கலை? கலை என்பது என்ன? பெரும்பான்மை சமூகம் விரும்பவதெல்லாம் சிறந்த கலையாகிவிடுமா? நாயக முன்னிலைப்படுத்தல்கள், சமூகத்தை ஒடுக்கும் பஞ்ச் வசனங்கள், யதார்த்தமற்ற திரைக்கதைகள் தான் சிறந்த திரைப்படங்களுக்கான அடையாளமா அல்லது அளவுகோலா? பெண் உடலை வியாபாரப் பெருளாக்கும் காட்சிகளை, இலட்சியப்படுத்தப்பட்ட உடல்களை, பெண் ஆளுமையைச் சிதைத்து, நலிந்த மலினமான பாலினமாக்கும் உத்திகளை, எல்லா ஆணிகளையும் நாயகனே (ஆண்) பிடுங்குவான் என்ற பார்வையை, இரட்டை அர்த்தத்தில் வக்கிரத்தைக் கொட்டும் பாடல்களை, வசனங்களை, நகைச்சுவைகளைச்; சிறந்த கலையாக்கம் எனலாமா?…

பொது நிகழ்வுகளில் நிறுவனங்களின் இலட்சனை (Logo) பாவிக்கும் முறையும் – முரண்பாடுகளும்.

நாட்டியக் கலைக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்ச்சியிருப்பினும் அது காலத்தினூடு பல மாற்றங்களைக் கடந்தே இன்றைய நிலையை அடைந்திருக்கிறது. சில தசாப்த காலங்களுக்கு முன் நாட்டியத்தில் நிகழ்ந்த மாற்றங்களோடுதான் பெருவாரியாக இன்றும் நாட்டியம் பயணப்பட்டு வருகின்றது. நாட்டியக்கலையில் புதிய விடயங்களை எடுத்துச்செல்வதற்கு எதிரான கருத்துக்களே பெரும்பான்மையாக இருப்பினும் எனது கருத்துநிலை வேறானது. . நல் மாற்றங்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் உட்படுத்துவது, எமது அடுத்த சந்ததிகளுக்கு இலக்கியம் சார்ந்து, சமூகம் சார்ந்து பேசும் ஒரு கலையாக நாட்டியக் கலையை நகர்த்திச்…

புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளும் எதிர்காலமும்

தமிழர்களின் புலப்பெயர்வு வாழ்வு ஐந்து தசாப்தங்களைக் கடந்துதிருக்கிறது. பெரும்பான்மையினர் போர் அழுத்தங்களாற் புலம் பெயர்ந்தவர்கள். தமிழ் உணர்வும், தம் நிலம் சார்ந்த பற்றும் இவர்களுடைய வாழ்வில் பல அமைப்புகளைக் கட்டியெழுப்புதலுக்கான உந்துதலாகவும், அடிப்படையாகவும் இருந்திருக்கின்றன. புலத்தில் வாழும் தம் சந்ததிகளுக்கு தமது மொழி, கலை, கலாசாரம் போன்றவற்றைக் கடத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்புகள், கல்விக்கூடங்கள், கலைக்ககூடங்கள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. இவ்வமைப்புகளிற் பணியாற்றியவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்து வாழும் முதற் சந்ததியினர் தாம். அன்றைய சூழ்நிலையாலும் தேவைகளினாலும் அமைப்புகள்…

உலகின் மிக அழகிய புத்தகக் கடை

உலகின் மிக அழகான புத்தகக் கடை. தமிழகத்திற்கோ, இலங்கைக்கோ சென்றால் புத்தகக் கடைகளுக்குச் செல்வது வழக்கம். ஐரோப்பிய பயணங்களில் புத்தகக் கடைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தப் புத்தகக்கடை விதிவிலக்கு. அங்கு புத்தகங்கள் வாங்குவதற்காகவும் நான் செல்லவில்லை. எனது ஸ்பெயின் நடை பயணத்திற்காகப் போத்துக்கல்லின் பொட்டோ (Porto) என்ற நகரத்தில் வந்திறங்கி, யாத்திரைக்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக ஒரு நாள் அங்கு தங்க வேண்டியிருந்தது. அந்த நகரில் உலகின் அழகிய புத்தகக் கடை இருப்பதை அறிந்து சனிக்கிழமையன்று காலையிலேயே…