நீ எங்கிருக்கிறாய்?

மண் நுழைந்து வேர்களினிடையே ஊறிய அந்தச் சொட்டுகள் போலவே என் பூமியின் விரிந்த தேகமெங்கும் கொட்டித் தீர்த்தனை நீ! என் வீட்டுப் புதர்களிலும் பூக்களிலும் படர்ந்து வரும் காற்றோடு கலந்து நின்றனை நீ! இப்போது எங்கிருக்கிறாய் நீ, என்று நான் கேட்கலாமா? யாதொன்றும் இல்லாத காலங்களின் அமைதியறுத்து யுத்தத்திற்குத் தயாராகி எழுந்து விரிகிறது ஒரு பறவை நிலவின் ஒளிர்வும் மழையின் சொட்டும் காற்றின் படர்வுமற்று எதுவும் தொலைத்த சிலவரிகளைத் தேடித்பிடித்துக் கொத்தி முழுங்கி விரித்த சிறகோடு கண்…

சகலமும் நான்

நீ சூரியனா இருந்து கொள்… தூரம் என்றாலும் உன் கதிர்கள் என்னை உரசிக்கொண்டுதானிருக்கும். நான் பூமி. நீ பறவையோ தூரம் போவாயோ…போய்வா நீ நிச்சயம் வருவாய். உன் கூடு என் விரல்களில். நான் மரம். காற்றாக மாறு காணாமல் போ. ஒவ்வொரு நொடியும் என்னுள் நிரப்பிக் கொள்வேன் நான் சுவாசம். மேகமாகி நீ அலைந்து திரி பொழிந்து கொட்டு எங்கோ வீழ்ந்து எங்கும் பாய்ந்து.. நீராகி நதியாகி உன் இறுதி சங்கமம் என்னிடம் தான். நான் கடல்.

இறைமீட்பு

நீ கொடுப்பாய் என்று தெரிந்தபின்னும் கேட்காமல் நான் எடுத்துக்கொண்டது காதல் ஒரு முறை அடித்தால் மறு கன்னத்தைக் காட்டச்சொன்னார் இயேசு அடிக்கடி நினைவில் வந்து தொலைக்கிறது அது நீ கொடுத்த முத்தத்தில் இன்பப் படுக்கையில் உன் நினைவுகளின் இறைமீட்பு. போர்த்திக் கொள்கிறது கனவு உன் விரலால் என் விரல் கவ்வி நீ கற்று தா நாம் கலைகள் பயில்வோம் நிலவினிலே மென் இதழ் முத்தமொன்றும் இதழ் உதிர்க்கும் வார்த்தைகளும் அள்ளிபோக நான் வருவேன் யாசகனாய்  இருப்பதில் ஆட்சேபனை எனக்கில்லை…

நீளமான இரவுகள்

நீளமான இரவில் இருட்டின் அடர்த்தி கிழித்து எரிந்து கொண்டிருந்தது உருகிவழிந்த மெழுகுவத்தி அழகான மழை வெளியே அற்புதமாயிருக்கிறது மண்வாசம் நிசப்தத்தின் ஆழுமையில் வெடித்து சிதறுகிறது உன்னுடனான என் முதல் நாள் நினைவுகள் ஒரு நொடியாய்க் கரைந்துபோன அந்த ஒருநாளப்பொழுது எத்தனை இரவை நீளமாக்கும் சொல் சிதறிய உன் நினைவுத்துண்டுகள் பொறுக்கி கீறிப்பார்க்கிறேன் என் உயிர்முழுதும் கசிந்துபோகும் ஏக்கத்தின் உச்சத்தில் யார் என்று நான் சொல்லியா தெரியவேண்டும் உனக்கு?