எதிர்ப்பின் நடனம்
துணிவப்பிய முகத்தோடு நான் வெளிக்கிளம்பினால் முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய் எதிர்பை உடுத்திப் புறப்பட்டால் சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார் அப்பா என் பேருருவில் பதுக்கிய உணர்வுகளை பிறாண்டி எடுத்து பேசத் தொடங்கினால் பெண்ணாக இரேன் என்கிறான் தம்பி மனுசியாய் இருக்க யாருக்கு மனுப்போட என சர்ச்சித்தால் பிரளயத்திற்கு பிறந்தவளே உட்கார் என்கிறான் திருப்தியற்று, கணவன் பெருந்திசைகளில் நான் எங்கிருந்தாலும் முலைகளையும் பெண்குறிகளையும் முதலிற்கண்டு, எனக்கே காட்டி ”இவை நீ“ என்கிறார் பிரபஞ்சம் வியக்க இவர்களை…




